வவுனியா (Vavuniya) விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (23) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும்
தெரியவருகையில், குறித்த நபர் துஸ்பிரயோக குற்றம் ஒன்றிற்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில்
அடைக்கப்பட்டிருந்தார்.
காவல்துறையினர் விசாரணை
இந்தநிலையில் நேற்றிரவு சிறைக்கூடத்திற்குள் தவறான
முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவர் சிறைக்காவலர்களால் மீட்கப்பட்டு வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக
வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://ibctamil.com/article/prisoner-dies-after-making-wrong-decision-vavuniya-1732436387

