முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்க நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு
வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் என நெல்லியடி
வாணிபர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக நெல்லியடி வாணிபர்
கழகத்தின் ஆதரவுடன் நெல்லியடி மத்திய சந்தைக்கு அருகாமையில் இன்று (14)
சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ‘நமக்காக
நாம்’ பரப்புரை கூட்டத்தின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி நகர் பகுதி வர்த்தகர்கள், அயல் பகுதி மக்களிடையே தமிழ்ப்
பொதுவேட்பாளருக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம்
குறித்து இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர்
நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தல் 

இதன்போது நெல்லியடி வாணிபர் கழகம் சார்பில் ஆதரவு தெரிவித்து விடுக்கப்பட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்க நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு | A Call In Favor Of Aryanethran

“தமிழர்களுக்காக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு
ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பது தமிழர்களாகிய எமது கட்டாய
கடமையாகும். சிதறுண்டு போயுள்ள நாம் ஓரணியல் ஒன்றுசேர்ந்து எமது ஒற்றுமையை
உலகிற்கு காட்டுவதற்கு இந்த சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழப் பொது வேட்பாளராக போட்டியிடும்
பா.அரியநேத்திரனுக்கு நெல்லியடி வாணிபர் கழகமாக எமது பூரண ஆதரவினை
வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.