Courtesy: uky(ஊகி)
முல்லைத்தீவு – சிலாவத்தைச் சந்தைக்கு முன்பாக பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மரம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயரமாக வளர்ந்த பனைமரம் ஒன்று இடையில் ஏற்பட்ட முறுக்கு காரணமாக உடைந்து விழும் நிலையில் இருப்பதாக சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டுகின்றது.
பனைமரம் குறுக்குத் திருப்பத்திற்கு பின்னரும் ஆரோக்கியமான முறையில் தொடர்ந்து வளர்ந்து கொண்டு செல்கிறது.
ஆனபோதும் அதன் மேல் உள்ள ஓலைகள் மற்றும் அதன் தண்டின் பாரம், வளர வளர அதிகரித்துச் செல்லுதல் ஆபத்தானதாகும்.
பலமான காற்று அல்லது சுழிக்காற்று வீசும் போது அது முறிந்து விழுந்தது விடலாம்.அப்படி நடந்தால், சந்தைக் கட்டிடமும் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்ற வியாபாரிகளும், அவர்களுடன் சந்தைக்கு வரும் நுகர்வோரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
வரும் முன் காத்தல்
வரும் முன் காத்தல் என்பது புத்தி சாதுரியமான சமூகத்தின் பொறுப்புணர்ச்சி மிக்க வெளிப்பாடாகும்.
ஆபத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை உணர்த்தும் தோற்றத்தில் இருக்கும் அந்த பனை மரத்தினை, விரைந்து அகற்ற வேண்டும்.
அல்லது, பொது மக்கள் பாதிப்பை எதிர்கொள்வதோடு சந்தைக்கான கட்டிடமும் அதனுடன் வீதியின் ஓரமாக செல்லும் பரிமாற்றக் கம்பிகளும் சேதமடைந்து போகும் துர்ப்பாக்கிய நிலை தோன்றும்.
சமூக ஆர்வலர்களின் சுட்டிக்காட்டல்களை பொறுப்புணர்ச்சியோடு உரிய தரப்பினர் கருத்தில் எடுக்கும் பட்சத்தில் ஏற்படவிருக்கும் விபரித விளைவுகளை முன்கூட்டியே தடுத்து விடலாம் என்பதும் நோக்கத்தக்கது.