காலிமுகத்திடல் போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள்
தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்வதில் சிக்கல் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே அவர்கள் விடயத்தில், நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிடும் என்று
அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சர், சட்டமா அதிபருடன் கலந்துரையாடுவார்
என்று வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சர்
கூறியுள்ளார்.

ஏனைய குற்றவியல் வழக்குகளைப் போலவே காலிமுகத்திடல் போராட்டச்
செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை
விரைவுபடுத்துவதில் சட்டமா அதிபர் ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்விக்கு
பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விlயத்தில் சட்டமா அதிபருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு எடுக்க வேண்டிய
நடவடிக்கைகளை நீதி அமைச்சர் வெளியிடுவார் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ
தெரிவித்துள்ளார்.

