மாலைத்தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் அடுத்த வாரம்
இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
மாலைத்தீவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன்
பேச்சுவார்த்தை நடத்துவார் மற்றும் கூட்டு ஊடக சந்திப்பையும் நடத்தவுள்ளார்.
அமைச்சர்களுடனான கலந்துரையாடல்
அவர், இலங்கையின் ஏனைய அமைச்சர்களுடனும் கலந்துரையாடுவார். அத்துடன்
மாலைத்தீவு சமூகத்தினரையும் சந்திப்பார்.
கலீல், 2024, செப்டம்பரில், மாலைத்தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சராக
ஜனாதிபதி முகமது முய்சுவால் நியமிக்கப்பட்டார்.