தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதுபெரும் தூணான மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜாவின் (Dr.T.W.Jeyakularajah) மறைவுக்கு மக்கள் பேரெழுச்சி இயக்கம் ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தியுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மக்கள் பேரெழுச்சி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது வாழ்நாளில் அதிகமான காலப்பகுதியை தேசவிடுதலைப் பணிக்காக அர்ப்பணித்தவர்.
தியாகம் நிறைந்த பணி
ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தின் ஆரம்பம் முதலே தன்னை தமிழினத்தின் ஒப்பற்ற உயரிய உன்னத விடுதலைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்து தனது தியாகம் நிறைந்த பணியினாலும் போர்க்காலங்களில் மக்கள் துயர்துடைப்பு பணிகளிலும் மருத்துவ சேவையிலும் தன்னை அர்ப்பணித்து பணியாற்றியதன் மூலம் எம்மின மக்களின் உள்ளங்களிலும் எம் தேசத்தலைவரின் இதயத்திலும் நீங்காத இடம்பிடித்தன் மூலம் எம் தேச ஆன்மாவில் நீக்கமற நிலைத்து ஈழத்தமிழர் வரலாற்றில் தனிமனித சரித்திரமாக மிளிர்கின்றார்.
தாயகத்தில் பேரினவாத ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும் உச்சம் பெற்றிருந்த நிலையில் தனது உயிரைக் கூட ஒரு பொருட்டாக எண்ணாது ஈழத்தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் தனது மருத்துவப்பணியினையும் மனிதநேயப்பணியினையும் மிக அர்ப்பணிப்புடன் வழங்கினார்.
தனது தியாகம் நிறைந்த பணியினாலும் போர்க்காலங்களில் மக்கள் துயர்துடைப்பு பணிகளிலும் மருத்துவ சேவையிலும் தன்னை அர்ப்பணித்து பணியாற்றியதன் மூலம் எம்மின மக்களின் உள்ளங்களிலும் எம் தேசத்தலைவரின் இதயத்திலும் நீங்காத இடம்பிடித்தன் மூலம் எம் தேச ஆன்மாவில் நீக்கமற நிலைத்து ஈழத்தமிழர் வரலாற்றில் தனிமனித சரித்திரமாக மிளிர்கின்றார் என இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.