அஜித்தின் தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கொடுத்தார். இதை தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என பல சூப்பர்ஹிட் ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கினார்.

மதராஸி
முன்னணி வெற்றி இயக்குநராக பயணித்து வந்த ஏ.ஆர். முருகதாஸ் கடந்த சில திரைப்படங்களில் தோல்விகளை சந்தித்தார். இதை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம்தான் மதராஸி. இப்படம் இவருக்கு கம்பேக் ஆக அமைந்துள்ளது என சிலர் கூறினாலும், சிலர் கலவையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள்.

மதராஸி படத்தில் முதல்முறையாக முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். மேலும் ருக்மிணி வசந்த், பிஜு மேனன், வித்யுத் ஜாம்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மதராஸி படம் இதுவரை ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர்
முருகதாஸ் சம்பளம்
இந்த நிலையில், இப்படத்தை இயக்குவதற்காக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மதராஸி படத்திற்காக முருகதாஸ் ரூ. 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.


