துருக்கியின்(turkey) அங்காரா நகருக்கு வெளியே உள்ள அரசுக்கு சொந்தமான விமான நிறுவனத்தின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் அங்காராவுக்கு வெளியே சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு வெளியே குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கிய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்
துருக்கிய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனத்தின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மேயர் Selim Çırpanoğlu தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதை துருக்கிய உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார், மேலும் சம்பவத்தில் 14 பேர் காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆயுததாரியின் நடமாட்டம்
விமான நிறுவனத்தின் உள்ளே ஆயுததாரி ஒருவர் நடமாடுவது அங்குள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலில் எத்தனைபேர் ஈடுபட்டனர் என்பது தெரியவராத நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் நடுநிலைப்படுத்தப்பட்டனர் என துருக்கிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை.