கதை
மூன்று நண்பர்கள் இணைந்து ஒரு மெடிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார்கள். அந்த கடையின் உரிமையாளர் கடையை விற்க முடிவெடுக்க, அதை அவர்களே வாங்கிக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.
இந்த நிலையில், மெடிக்கல் கடையை வாங்க அவர்கள் சேமித்து வைத்த பணம் திருடப்படுகிறது. இதன்பின் ஊருக்கு சென்று சொத்தை விற்று பணத்தை தயார் செய்ய முடிவு எடுக்கிறார் அவர்களில் ஒருவரான ஆதித்யா. அவருடன் இரு சக்கர வாகனத்தில் துணையாக செல்கிறார் விக்கி. இந்த பயணத்தின்போது அவர்களின் வண்டி டயர் பஞ்சராகிறது.


விராட் கோலியை சந்தித்த சிம்பு.. கண்டுகொள்ளாமல் போன சம்பவம்! இப்படி நடந்ததா
அதை சரிசெய்ய காட்டுக்குள் இருக்கும் ஒரு பஞ்சர் கடைக்கு செல்கிறார்கள். அங்கே உள்ள அந்நியர்களுடன் ஏற்ப்படும் பிரச்சனையால் ஆபத்தான சூழலில் சிக்கிக்கொள்கிறார்கள். இதன்பின் என்ன நடந்தது என்பதே ஆகக்கடவன படத்தின் மீதி கதை..
விமர்சனம்
இப்படத்தை அறிமுக இயக்குநர் தர்மா இயக்கியுள்ளார். நேற்று திரையரங்கில் வெளிவந்துள்ள இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, திரைக்கதை ஆகியவை இன்னும் கூட வலுவாக இருந்திருக்கலாம் என விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இளைஞர்களின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஆகக்கடவன திரைப்படத்தை கண்டிப்பாக அனைவரும் திரையரங்கிற்கு சென்று காணுங்கள்.

