நடிகர் விஷ்ணு விஷால் தனது முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டு 2021-ல் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே முதல் மனைவி உடன் விஷ்ணு விஷாலுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

பெயர் சூட்டிய அமீர்கான்
இந்நிலையில் மகளின் பெயர் சூட்டு விழாவை விஷ்ணு விஷால் சமீபத்தில் நடத்தி இருக்கிறார். அதில் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு குழந்தைக்கு பெயர் சூட்டி இருக்கிறார்.
மிரா என தான் பெயர் வைத்திருக்கிறார் அமீர் கான். நிபந்தனை அற்ற அன்பு மற்றும் அமைதி என்பதுதான் அந்த பெயருக்கு அர்த்தம்.
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமீர்கான் கலந்து கொண்டது பற்றிநெகிழ்ச்சியாக instaவில் பதிவிட்டு, நன்றி கூறி இருக்கிறார் விஷ்ணு விஷால்.
View this post on Instagram

