பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த வாரம் ரிலீஸ் ஆன டிராகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
டான் 2 படமா என ட்ரெய்லர் பார்த்துவிட்டு பலரும் விமர்சித்தனர். ஆனால் அதை எல்லாம் தகர்த்து தற்போது நல்ல வசூலையும் பாக்ஸ் ஆபிசில் டிராகன் படம் பெற்று கொண்டிருக்கிறது.
கால் இழந்த நடிகருக்கு பெரிய தொகையை கொடுத்த KPY பாலா.. எவ்வளவு பாருங்க
அமீர் கான்
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் அமீர் கான் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அவர் தன்னிடம் சொன்ன வார்த்தைகளை வாழ்க்கை முழுவதும் மறக்கவே மாட்டேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
“நான் எப்போதும் சொல்வது போல வாழ்க்கை எப்போதும் கணிக்க முடியாதது” என்று தான் அமீர் கான் அவரிடம் சொன்னாராம்.
Life is unpredictable as i always say 🙂 Thankyou for your wonderful words #aamirkhan sir . Will cherish it for life ❤️ pic.twitter.com/HPjpJLvDN2
— Pradeep Ranganathan (@pradeeponelife) February 23, 2025