ஆரியன்
த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும். அதுவும் நம்பிக்கையான ஹீரோ நடித்திருந்தால் சொல்லவே தேவையில்லை.

அப்படி ஒரு ஹீரோவாக ரசிகர்களால் பார்க்கப்படும் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம்தான் ஆரியன்.

இப்படத்தை இயக்குநர் பிரவீன் கே. இயக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதுவரை இப்படம் நான்கு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

பிரியங்கா உட்பட பிக் பாஸ் வீட்டில் நுழைந்த மூன்று பழைய போட்டியாளர்கள்!
வசூல்
இந்த நிலையில், நான்கு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 5.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு இதுவரை கிடைத்துள்ள டீசன்ட் வசூலாக பார்க்கப்படுகிறது.


