அப்துல் ஹமீத்
காந்தக் குரல், அழுத்தமான தமிழ் பேச்சு என வானொலியில் பிரபலமானதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான லலிதாவின் பாட்டுக்கு பாட்டு மூலம் பிரபலமானவர் அப்துல் ஹமீது.
பல வருடங்களாக இந்த பாட்டு போட்டி படு வெற்றிகரமாக மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வந்தது. தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகள், ஏராளமான மேடைகளை பார்த்தவர் இலங்கையில் வசித்து வந்தார்.
பிரபலத்தின் வருத்தம்
நேற்று திடீரென சமூக வலைதளங்களில் இலங்கை பிரபலம் அப்துல் ஹமீத் உயிரிழந்துவிட்டதாக செய்தி பரவ ரசிகர்கள் ஷாக் ஆனார்கள், வருத்தமும் அடைந்தார்கள். ஆனால் உண்மையில் அவர் நலமுடன் தான் உள்ளார், வதந்தி கிளம்பியிருக்கிறது.
அண்ணாமலை வீட்டில் ஒரே சண்டை, ஆனால் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி… என்ன தெரியுமா?
வதந்திக்கு பின் கண்ணீருடன் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அப்துல் ஹமீது. அதில் அவர், மாண்டவன் மீண்டும் வந்து பேசுகிறானே என சிலர் வியந்து நோக்கக்கூடும்.
நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை, பலர் தொலைபேசியில் விசாரித்தார்கள்.
செத்துப் பிழைப்பது எனக்கு 3வது அனுபவம், முதல் அனுபவம் 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு எரித்துவிட்டார்கள் என வதந்தி பரவியது.
2 ஆண்டுகளுக்கு முன் யூடியூப்பில் ஒருவர் என்னுடைய பெயரை போட்டு இறந்ததாக பதிவு செய்தார். தற்போது 3வது முறை என்னைப் பற்றி மரண செய்தி.
3 முறை உயிர் பிழைத்திருக்கிறேனா என்று நகைச்சுவையாக எண்ணத் தோன்றுகிறது என பேசி உள்ளார்.
நீடூடி வாழ்க.. ????????????
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ பதிவை வெளியிட்ட BH அப்துல் ஹமீது… pic.twitter.com/Tz1kUmr7Yk
— KS / Karthigaichelvan S (@karthickselvaa) June 25, 2024