மெக்சிகோவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து நேற்று (08) மெக்சிகோவின் தெற்கு கான்கன் மற்றும் டபாஸ்கோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெற்கு மெக்சிகோவில் நேற்று அதிகாலையில் 48 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கான்கன் மற்றும் டபாஸ்கோ இடையே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மாநில அதிகாரி
இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக டபாஸ்கோ அரசு தெரிவித்துள்ளதுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், பேருந்தில் இருந்த 38 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் உயிரிழந்ததுடன் லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவையான உதவிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் இணைந்து செயறபடுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.