குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிக்கந்தர் திரை விமர்சனம்
இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி இப்படத்தை திரையரங்கில் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அஜித்தின் புதிய லுக்
இந்த நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் அஜித்தின் புதிய லுக் என குறிப்பிட்டு, அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் நடிகர் அஜித், வழக்கமான ஸ்லாட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், பில்லா அஜித் போல் இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்..
#AK Sirs new Avatar 😍😍😍😍😍😍😍😍😍❤️💥💥💥🔥🔥🔥🔥🔥🔥💣💣❤️🙏🏻 pic.twitter.com/9cNITWDKhL
— Adhik Ravichandran (@Adhikravi) March 30, 2025