நடிகர் தினேஷ்
அட்டகத்தி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் தினேஷ். இதன்பின், விசாரணை திரைப்படம் இவருக்கு கைகொடுத்தது.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும், கடந்த ஆண்டு வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம்தான் அட்டகத்தி தினேஷை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்தது.
இப்படத்தின் மூலம் அட்டகத்தி தினேஷ் என அழைக்கப்பட்டு வந்த இவர், கெத்து தினேஷாக மாறிவிட்டார். இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இவருடைய சம்பளமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
சம்பளம்
அதன்படி, லப்பர் பந்து திரைப்படத்திற்கு முன் இவர் ரூ. 1 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வந்தாராம். ஆனால், தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 8 கோடி வரை தனது சம்பளத்தை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.