நாடோடிகள்
கடந்த 2009ம் ஆண்டு வெளியான படங்களில் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை கண்ட படமாக அமைந்தது நாடோடிகள் திரைப்படம்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், பரணி, விஜய் வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளியான இப்படம் நட்பு, காதல் ஆகியவற்றை மையமாக கொண்டது. இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்ததன் மூலம் உடல் பாதிப்பு ஏற்பட்டதாக நடிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

நடிகர் பேட்டி
நாடோடிகள் படத்தில் நடித்த பரணி அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, நாடோடிகள் படத்தில் என்னை காதில் அடிக்கும் காட்சி முதலில் டம்பி வைத்து அடித்தார்கள், ஆனால் அது உடையாமல் வளைஞ்சது.

அதனால் உண்மையான PVC பைப் வைத்து அடித்தார்கள், அப்போது தெரியவில்லை. ஆனால் நாள் போக போக பின் மண்டை வலிக்க ஆரம்பித்தது, டெஸ்ட் பண்ணி பாத்தா அதோட பாதிப்பு இன்னிக்கு வர இருக்கு.
என்னதான் இன்னிக்கு வர வலித்தாலும் அந்த சீன் இன்னைக்கு வர பேசுறாங்க, கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது என பேசியுள்ளார்.

