ஒருநாள் இரவு விருந்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைத்ததாக பிரிட்டிஷ் நடிகை தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் நடிகை எம்மா தோம்சனுக்கு (66) லியோபாட் கிளப் விருது (Leopard Club Award) வழங்கப்பட்டது. இவர் ஒஸ்கர் விருதும் பெற்றவர்.
இந்த விழாவில் பேசும்போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
1998-ல் ஒருநாள் இரவு விருந்துக்கு அழைத்த ட்ரம்ப்
`1998-ல் ஒருநாள் இரவு விருந்துக்கு அழைப்பு விடுத்து, என்னை ட்ரம்ப் தொடர்பு கொண்டார். அவரது இடத்தில் நான் தங்குவதை அவர் விரும்புவதாகக் கூறினார்.
ஆனால், அவர் ட்ரம்ப்தான் என்று நான் நம்பவில்லை. இருப்பினும், நான் அவரை மீண்டும் அழைப்பதாகக் கூறிவிட்டேன்.மேலும், அதே நாளில்தான் நான் விவாகரத்து பெற்றிருந்தேன்’’ என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் போக்கை மாற்றியிருக்கலாம்
ட்ரம்ப்புடன் நான் விருந்துக்குச் சென்றிருந்தால், இன்று உங்களிடம் சொல்வதற்கு ஏதேனும் கதையும் எனக்கு கிடைத்திருக்கும். அமெரிக்காவின் போக்கையும் நான் மாற்றியிருக்கலாம் என்று தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.