பிரபல நடிகர்
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக 80, 90களில் கலக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் நடிகர் கோவிந்தா.
இவர் இன்று காலை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய ரத்தம் மளமளவென கொட்டியுள்ளது.
இதனால் உடனே அவரை உறவினர்கள் மும்பையில் உள்ள கிரிட்டி கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடந்துள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிசை அளித்து வருகின்றனர்.
இருப்பினும் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.