ஹரிஷ் கல்யாண்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த பார்க்கிங் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
சிந்து சமவெளி படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிகர் விஜய் கட்டும் பிரமாண்டமான தியேட்டர்.. எந்த இடத்தில் தெரியுமா
மேலும் கடந்த ஆண்டு வெளிவந்த பார்க்கிங் இவருக்கான நல்ல மார்க்கெட்டையும் சினிமாவில் உருவாக்கியுள்ளது. இவர் நடிப்பில் அடுத்ததாக லப்பர் பந்து, டீசல், நூறு கோடி வானவில் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு நர்மதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஹரிஷ் கல்யாணின் தந்தை
இவர்களுடைய திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ஹரிஷ் கல்யாணின் தந்தை இவர், இந்த வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிக்கிறாரே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..