சீரியல் நடிகர்
சீரியல் பிரபலங்கள் இப்போதெல்லாம் வெள்ளித்திரை பிரபலங்களை தாண்டி மிகவும் பிரபலமாக உள்ளார்கள்.
போட்டோ ஷுட், திருமணம் என என்ன விஷயம் சின்னத்திரை கலைஞர்களை பற்றி வந்தாலும் மிகவும் வைரலாகிவிடுகிறது.
அப்படி இப்போது ஒரு சீரியல் நடிகரின் திருமணம் பற்றிய செய்தி தான் சமூக வலைதளங்களில் அதிகம் உலா வருகிறது.

திருமணம்
தெலுங்கில் பேமஸாக ஓடிய சக்ரவாகம் சீரியலில் மருமகன்-மாமியாராக நடித்தவர்கள் இப்போது நிஜ வாழ்க்கையில் இணைந்துள்ளார்கள். இந்த தொடரில் மருமகனாக இந்திரனில் நடித்திருக்கிறார், மாமியாராக மேகனா ராமி நடித்திருக்கிறார்.

இவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைந்து போது மாமியாரை திருமணம் செய்தவர் என்று அப்போது நிறைய கிண்டல்களை இவர்கள் சந்தித்துள்ளார்களாம். இவர்கள் இருவருக்கும் இப்போது 40 வயதிற்கு மேல் ஆகிறது.
வயது அதிகம் ஆகிவிட்டதால் குழந்தை பெற்றால் அவர்களுக்கும் கஷ்டம் என குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற முடிவில் உள்ளார்களாம்.
தற்போது திடீரென இவர்களது திருமணம் பற்றிய செய்தி உலா வருகிறது.


