கவின்
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடந்து ஆண்டு வெளிவந்த டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து, கவின் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று வெளியான திரைப்படம் பிலடி பெக்கர். அறிமுக இயக்குநரான சிவபாலன் இயக்கத்தில் முதன் முதலாக நெல்சன் திலீப்குமார் தயாரித்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.


அச்சு அசல் நடிகர் ராம் சரண் போன்று உருவாக்கப்பட்ட தத்ரூப சிலை.. ஷாக்கிங் வீடியோ
எப்போது தெரியுமா?
தற்போது, கவின் பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, வரும் ஜூலை மாதம் இப்படம் வெளியாக உள்ளதாக நடிகர் கவின் அவரது ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
🙂 #Kiss pic.twitter.com/PaAOMOyTFH
— Kavin (@Kavin_m_0431) May 14, 2025

