போதைப் பொருள்
போதை பொருள் ஒழிப்பில் சென்னை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அப்படி அண்மையில் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் விசாரணையில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துலக் (26) நம்பர் சிக்கியிருக்கிறது.
இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து அலிகான் துலக்கை தனிப்பதை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.