குபேரா படம்
வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ் தெலுங்கு பட இயக்குனருடன் இணைந்து நடித்துள்ள படம் குபேரா.
சேகர் காமுலா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தின் தனுஷுடன், ராஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜுன் 20ம் தேதி படம் ரிலீஸ் ஆன நிலையில் படத்தின் கதைக்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்துள்ளன.
இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்து ஆர்ச்சயப்படுத்தி உள்ளார். அதே நேரம் தனுஷின் நடிப்பும், இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


ஜீ தமிழில் புத்தம் புதிய மெகா தொடர், சின்னஞ்சிறு கிளியே… புரொமோவுடன் இதோ
சம்பளம்
இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் ரூ. 30 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம். தனுஷிற்கு நிகராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகர்ஜுனா சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
குபேரா படத்திற்காக நடிகர் நாகர்ஜுனா ரூ. 14 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

