காதலர் தினம்
பிப்ரவரி 14 என்றதும் உடனே அனைவருக்கும் நியாபகம் வருவது காதலர் தினம்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த நாளை தங்களுக்கு பிடித்தார் போல் கடந்துள்ளனர். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் பல விதமாக காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்கள்.
காலை முதல் சினிஉலகம் பக்கத்திலும் பிரபலங்களின் காதலர் தின புகைப்படங்களை பதிவிட்டு வருகிறோம்.
நெப்போலியன்
தற்போது நடிகர் நெப்போலியன் குடும்பம் காதலர் தினத்தை எப்படி கொண்டாடியுள்ளார்கள் பாருங்க.
அண்மையில் ஜப்பானில் தனது மகனின் திருமணத்தை முடித்த நெப்போலியன் குடும்பம் தற்போது சிங்கப்பூர் வந்துள்ளனர். நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு நெப்போலியன் குடும்பம் சிம்பிளாக கொண்டாடியுள்ளார்.
நெப்போலியனின் மகன் மற்றும் மருமகள் இருவரும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து நெப்போலியனும் அவருடைய மனைவியும் கேக் வெட்டி தங்களுடைய காதலை பரிமாறி இருக்கிறார்கள்.