ராகவா லாரன்ஸ்
விவரம்
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என திரையுலகில் பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.
இவருடைய சினிமா பிரபலத்தை தாண்டி, அனைவருக்கும் இவரை பிடிக்க காரணம் அவருடைய நல்ல மனசு தான். அனைவருக்கும் உதவ வேண்டும் என்கிற அவரின் குணத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் அடுத்ததாக காஞ்சனா 4 மற்றும் பென்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் காஞ்சனா 4 படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

100 கோடியை கடந்து வசூலை அள்ளும் Dude.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
சொத்து மதிப்பு
இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் 49வது பிறந்தநாள் ஆகும். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

