பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கடந்த வருடத்தில் இருந்தே அவருக்கு அரசு Y+ பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர் வீட்டின் மீது கடந்த வருடம் ஏப்ரலில் சில மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். லாரன்ஸ் பிஷ்நோய் என்ற கேங்ஸ்டர் தான் தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அதனால் அவருக்கு 11 காவலர்கள் மற்றும் கமாண்டோக்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அவருக்கு புது கொலை மிரட்டல் வந்திருக்கிறது.
காரை வெடிக்க வைப்போம்
சல்மான் கானை வீடு புகுந்து கொலை செய்வோம், காரை பாம் வைத்து வெடிக்க வைப்போம் என வாட்சப்பில் கொலை மிரட்டல் வந்திருக்கிறது.
இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து இது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.