சூப்பர் குட் சுப்பிரமணி
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சுப்பிரமணி. இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் தான் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைப்பார்கள்.
இயக்குநர் ஆக வேண்டும் என்கிற கனவுடன் சினிமாவிற்குள் வந்துள்ளார். ஆனால், அது நடக்கவில்லை. ஆனாலும் கூட சினிமா இவரை கைவிடவில்லை. நடிகராக பல படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
விஜய் டிவியை வாங்கிய முன்னணி நிறுவனம்! வெளியேறிய பிரியங்கா, கோபிநாத்? ஷாக்கிங் தகவல்
பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், கூர்கா, ரஜினி முருகன் உள்ளிட்ட ஏராளமாக படங்களில் நடித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பு
இந்த நிலையில், அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதன்பின் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சை பெற்றுவரும் நடிகர் சுப்பிரமணிக்கு புற்றுநோய் பாதிப்பில் 4வது கட்டம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.