சச்சின் படம்
நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் கடந்த ஏப்ரல் 18ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆனது.
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான சச்சின் படத்தில் விஜய்யுடன் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் என பலர் நடிக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
காதல், நகைச்சுவை என அனைவராலும் ரசிக்கப்பட்ட இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ் இசை அமைந்திருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
தளபதி ரசிகர்களை தாண்டி சினிமா ரசிகர்களால் சச்சின் ரீ-ரிலீஸும் மாஸாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை படம் மொத்தமாக ரூ. 9 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.