விஜய் வசந்த்
தமிழ் சினிமாவில் கடந்த 2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் விஜய் வசந்த்.
மிர்ச்சி சிவா, விஜய் வசந்தை வெங்கட் பிரபுவிடம் அறிமுகம் செய்து வைக்க சென்னை 28 படத்தில் நடித்தார்.

அதன்பின் தோழா, நாடோடிகள் படத்தில் நடித்தார்.
கனிமொழி படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார், அஜித்தின் 50வது படமான மங்காத்தா மற்றும் விஜய்யின் நண்பன் படத்திலும் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.
அடுத்தடுத்தும் படங்கள் பிஸியாக நடித்த இப்போது முழுநேர அரசியல் தலைவராக வலம் வருகிறார்.
புகழ்பெற்ற வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராகவும் உள்ளார்.

மீனாவிற்கு இடிமேல் இடி விழும் விஷயங்களாக கூறிய செந்தில்… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
குடும்பம்
நடிகர் விஜய் வசந்திற்கு நித்யா என்பவருடன் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார், அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை விஜய் வசந்த் தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
அப்படி அவர் வெளியிட்ட ஒரு குடும்ப போட்டோ தான் இப்போது வைரலாகி வருகிறது.


