விஜய் – சங்கீதா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜனநாயகன் என தலைப்பு வைத்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்ட்டர்கள் வெளிவந்து இணையத்தில் வைரலானது. அரசியலில் களமிறங்கியுள்ள தளபதி விஜய், கடைசி படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.
பத்ம பூஷன் விருது பெரும் நடிகர் அஜித் குமார்.. வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் தனது மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை, இருவரும் பிரிவு ஏற்பட்டுவிட்டது என பல வதந்திகள் வெளிவந்தது.
மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட சங்கீதாவை அதன்பின் விஜய்யுடன் எந்த ஒரு நிகழ்விலும் காணமுடியவில்லை. இதனால் பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், அவை யாவும் உண்மையான தகவல்கள் இல்லை என பின் தெரியவந்தது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சங்கீதாவின் முழு சொத்து மதிப்பு ரூ. 400 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. சங்கீதாவின் தந்தை லண்டனில் உள்ள பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்த தகவல் அதிகாரபூர்வமானது இல்லை. முன்னணி இணையதளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் ஆகும். மேலும் இது சினிஉலகம் இணையதளத்தின் சொந்த கருத்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.