தங்கமகள்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2024ம் ஆண்டு சில புதுமுகங்களுடன் தொடங்கப்பட்ட ஒரு தொடர் தங்கமகள்.
ஹரிஷ் ஆதித்யா இயக்கத்தில் யுவன் மயில்சாமி, அஷ்வினி முக்கிய நடிகர்களாக நடிக்க தொடங்கப்பட்ட இந்த தொடர் 202 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ராமசாமியின் உயிரிழப்பிற்கு அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட பிறகே தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முடிவில் உள்ளார் ஹாசினி.
அதற்காக அவரது குடும்பத்தினர் கொடுக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து வருகிறார்.
மாற்றம்
தற்போது கதையில் வில்லியாக வலம் வருபவர் பைரவி. இந்த கதாபாத்திரத்தில் காயத்ரி ஜெயராம் இதுநாள் வரை நடித்து வர தற்போது மாற்றம் நடந்துள்ளது.
பைரவி கதாபாத்திரத்தில் இனி ஜீவிதா கிருஷ்ணன் தான் நடிக்க உள்ளாராம்.
இதோ அவரே தனது இன்ஸ்டாவில் போட்ட பதிவு,
View this post on Instagram