சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது மாஸ் காட்டி வரும் நடிகையின் புகைப்படம் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. சம்பவம் உறுதி
அட இவரா
அந்த நடிகை வேறு யாருமில்லை தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி தான்.
இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திலும் நடிகர் துல்கர் சல்மானின் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இதன் பின், சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கு திரைப்படமான சங்கராந்திக்கு வஸ்துன்னாம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் மீனாட்சி செளத்ரி உடன் ஐஸ்வர்யா ராஜேஷும் மற்றொரு ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது இவரின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.