ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஜான்வி கபூர்.
ஹிந்தியில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வெற்றிப்பட நாயகியாக வலம் வந்தவர் தேவாரா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இப்போது ராம் சரணுடன் இணைந்து புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
படங்கள் நடிப்பதை தாண்டி ஜான்வி கபூர் பேஷன் ஷோவில் கலந்துகொள்வது, போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்.
கார் பரிசு
தற்போது நடிகை ஜான்வி கபூருக்கு ரூ. 4 முதல் ரூ. 9 கோடி மதிப்புள்ள Lamborghini கார் பரிசாக கிடைத்துள்ளது. இவ்வளவு விலைமதிப்புள்ள காரை ஜான்வி கபூருக்கு பரிசாக கொடுத்த அவரது நெருங்கிய தோழி Ananya Birla தானாம்.
இன்று இந்த கார் ஜான்வி கபூர் வீட்டிற்குள் வந்து சேர்ந்துள்ளது.