ஜெயிலர் 2
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஜெயிலர் 2 படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


பிக் பாஸில் அடுத்த வார எலிமினேஷன், டைட்டில் வின்னர் யார்? திவாகர் பகிர்ந்த ரகசியம்!
ஹாப்பி நியூஸ்!
இந்நிலையில், இப்படத்தில் இந்தி நடிகை அபேக்ஷா போர்வல் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியில் ‘உண்டேகி'(Undekhi), ‘ஹனிமூன் போட்டோகிராஃபர்’, ‘ஸ்லேவ் மார்க்கெட்’ ஆகிய வெப் தொடர்களில் மூலம் பிரபலமானவர் நடிகை அபேக்ஷா. இவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன.


