குஷ்பூ
குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை துவங்கி, பின் திரையுலகில் முன்னணி நாயகியாக மாறியவர் குஷ்பூ. பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமா பக்கம் வந்த குஷ்பூ, முதலில் தெலுங்கில் நடித்தார்.
நடிகை ஸ்ரீதேவி மிகவும் திமிர் பிடித்த நடிகை.. பிரபல நடிகை கூறிய ஷாக்கிங் தகவல்
பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
10 ஆண்டுகளாக காதலித்து இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். நடிகை, தயாரிப்பாளர் என சினிமாவில் பயணித்து வரும் குஷ்பூ, அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
சொத்து மதிப்பு
இன்று நடிகை குஷ்பூவின் 54வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும், திரையுலக சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களை சமுக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகை குஷ்பூவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.