நயன்தாரா
மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கேரளாவை பூர்விகமாக கொண்ட நயன்தாரா, ஐயா படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.
கடைசி படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக மாறினார். தற்போது இவரை தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.
மோசமான முடிவு!!
இந்நிலையில் நடிகை நயன்தாரா கஜினி படத்தில் நடித்தது குறித்து பேசிய பழைய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “கஜினி திரைப்படத்தில் நடித்ததுதான் என்னுடைய வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு என்று நான் கருதுகிறேன்”.
“கஜினியில் என்னுடைய கதாபாத்திரம் என்னிடம் சொல்லப்பட்டபடி எடுக்கவில்லை என்னை மோசமாக சித்தரிக்கப்பட்டேன். இந்த விஷயத்தை எனது வாழ்க்கையில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்” என்று நயன்தாரா கூறியுள்ளார்.