பிரஷாந்த்
90 களில் அஜித், விஜய் காட்டிலும் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகர் பிரஷாந்த். அதன் பின், சில காரணத்தால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
மீண்டும் பல ஆண்டுகளுக்கு பின் அந்தகன் படத்தின் மூலமாக பிரஷாந்த் கம்பேக் கொடுத்தார். இப்படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.
இதனை அடுத்து விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான GOAT படத்திலும் பிரஷாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றி.. அஜித் குமார் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
உடைத்த ரகசியம்
இந்நிலையில், நடிகர் பிரஷாந்த் குறித்து நடிகை கிரண் முன்பு பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், “பிரசாந்த் மிகச்சிறந்த மனிதர். ஒருமுறை அவரது நட்பு வட்டத்துக்குள் நாம் சென்றுவிட்டால் நம்மை அக்கறையோடு கவனித்துக்கொள்வார். நாமே அவரிடம் பேசாவிட்டாலும் அவரே நம்மை அழைத்து நலம் விசாரிப்பார். அவர் தமிழ் சினிமாவில் நல்ல மனிதர்” என்று தெரிவித்துள்ளார்.