பூஜா ஹெக்டே
தமிழில் வெளிவந்த முகமூடி படம்தான் பூஜா ஹெக்டேவின் திரையுலக அறிமுகமாகும். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை.

இதன்பின் தனது கவனத்தை தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் திருப்பிய பூஜா, தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். குறிப்பாக அல்லு அர்ஜுன் உடன் இவர் இணைந்து நடித்த ‘அலா வைகுண்டபுரம்’ திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. இப்படத்தில் வரும் புட்டா போம்மா பாடல் உலகளவில் ரீச் ஆனது.

இதன்பின் மீண்டும் தமிழில் எண்ட்ரி கொடுத்த பூஜா, பீஸ்ட், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தற்போது தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மதராஸி படம் பிளாப்.. பிக் பாஸ் மேடையில் ஏ.ஆர். முருகதாஸை தாக்கி பேசிய சல்மான் கான்
பிறந்தநாள் – சொத்து மதிப்பு
இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் பூஜா ஹெக்டேவின் 35வது பிறந்தநாள் இன்று. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 60 கோடி என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 6 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். சிறப்பு பாடலுக்கு நடனமாட ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

