ரகுல் ப்ரீத் சிங்
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.
கடைசியாக அவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுல் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
கனிமா பாடல் டிரெண்டில் இணைந்த லப்பர் பந்து பட நடிகை.. க்யூட் வீடியோ
அந்த விஷயம்
இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “ஆரோக்கியமான மற்றும் கவனமுள்ள தேர்வுகள் மூலமாக உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள்.
விருப்பமான புத்தகத்தை படியுங்கள். பிடித்தவற்றை செய்யுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் அது தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த மருந்து. குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.