நடிகர் விஜய்
தமிழ் சினிமா ரசிகர்கள் பல வருடங்களாக முன்னணி நாயகனாக கொண்டாடி வருபவர் நடிகர் விஜய். இப்போது இவர் தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் விஜய் தனது கடைசி படமான 69வது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அம்பானி மகன் திருமணத்தில் நடனம் ஆடியது ஏன்?- நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்
ஆனால் பட வேலைகளுக்கு நடுவில் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளில் படு பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் மாணவர்களை சந்தித்து பரிசு கொடுத்து பேசிய முக்கிய விஷயங்கள் அதிகம் ரீச் ஆனது.
லேட்டஸ்ட் க்ளிக்
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் க்ளிக் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய்யுடன், நடிகை ரம்பா குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படங்களை நடிகை ரம்பாவே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு, விஜய் உங்களை பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பது சந்தோஷம் என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram