சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சிட்டாடல் வெப் தொடர் வெளிவரவுள்ளது. இந்த வெப் தொடருக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சிட்டாடல் வெப் தொடரில் ஆக்ஷன் நாயகியாக சமந்தா கலக்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த இந்த வெப் தொடரின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வெப் தொடரை தொடர்ந்து படங்களிலும் தொடர்ந்து கமிட்டாகி வருகிறாராம்.
அஜித்துக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்களா.. பிரபல நடிகை கூறிய ரகசியம்
தெலுங்கில் தற்போது பங்காரம் எனும் திரைப்படத்தில் கமிட்டாகியுள்ள சமந்தா அடுத்தடுத்த இன்னும் சில படங்களை கமிட் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
10ஆம் வகுப்பு மார்க் ஷீட்
இந்த நிலையில் நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மார்க் ஷீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் கணக்கில் 100க்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளார் சமந்தா. ஆனால், சில இது உண்மையான மார்க் ஷீட் இல்லை என்றும் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..