நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
விறுவிறு என படங்கள் கமிட்டாகி நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவருக்கு இடையில் உடல் நலத்தில் பிரச்சனை வர இடையில் கேமரா பக்கமே வராமல் இருந்திருந்தார். ஆனால் இப்போது மீண்டும் பழையது போல் ஆக்டீவாக உள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் ரிலீஸ் ஆகி இருந்தது. சமந்தா இப்போது ரக்த் பிரம்மாண்ட் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
நகை விலை
சமீபத்தில் நடிகை சமந்தா தான் சினிமாவிற்குள் நுழைந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது என புடவையில் ஒரு சூப்பர் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் அணிந்திருந்த நகைகளின் விவரங்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது.
அவர் அணிந்திருந்த Necklace விலை ரூ. 5.56 லட்சம் என்றும் மோதிரம் விலை ரூ. 1.43 லட்சம் என்றும் கூறப்படுகிறது.