ஸ்ருதிஹாசன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன்.
ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம்.. முதன் முறையாக மனம் திறந்த ஜிவி பிரகாஷ்
கடைசியாக இவர் நடிப்பில் சலார் திரைப்படம் வெளியானது ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் பேட்டி ஒன்றில் ரிலேஷன்ஷிப் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் பேட்டி
அதில், ” காதல் என்பது ஒரு புனிதமான உறவு எனக்கு அதன் மீது அதிக நம்பிக்கை உண்டு. நான் எப்போதும் என்னை யாரிடமாவது இணைத்துக்கொள்வேன்.
ஆனால் என் வாழக்கையில் இவர் தான் ஸ்பெஷல் என்று சொல்லும் அளவிற்கு இதுவரை ஒருவரையும் நான் பார்த்தது இல்லை.
காதலித்து தோல்வி அடைந்தால் அது மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நாம் பார்த்து கொள்ள வேண்டும். மேலும், பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு நாம் தான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.