நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என கொண்டாடப்படுபவர் 80களில் கலக்கிய நடிகை நதியா.
அவரை அடுத்து எவ்வளவு வயது ஆனாலும் இவர் எப்படி இளமையாகவே உள்ளார் என ரசிகர்கள் பார்த்து ஆச்சரியப்படுவது நடிகை த்ரிஷாவை தான்.
இப்போது இவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா?.. பிரபலம் போட்ட பதிவு
கடைசியாக விஜய்யுடன் லியோ படம் நடித்தவர் இப்போது அஜித்தின் படத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்து த்ரிஷா பெரிய படங்கள் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பியூட்டி சீக்ரெட்
நடிகை த்ரிஷா இளமையுடனும், பொலிவுடனும் இருக்க மிக முக்கிய காரணம் அவரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான்.
டயட்டில் தினமும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவாராம், ஐங்க்புட் உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவார்.
தினமும் காலை க்ரீன் டீ, பின் விட்டமின் சி அதிகம் உள்ள லெமன், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை டயட்டில் அதிகம் சேர்ப்பாராம்.
சருமத்தை இளமை குறையாமல் பொலிவுடன் வைத்திருக்க தினமும் அதிக அளவிலான தண்ணீர் குடிப்பது தான் சிறந்தது என கூறுகிறார் த்ரிஷா.
தினமும் 7 மணி முதல் 8 மணி நேரம் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொப்பாராம். சரும ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் சர்க்கரையை எந்த ஒரு உணவிலும் எடுத்துக் கொள்ளாமல் முற்றிலும் தவிர்த்து விடுவாராம்.