நடிகை வாசுகி
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுடன் பல படங்களில் காமெடி ரோலில் இணைந்து நடித்தவர் வாசுகி.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடர்ந்து படங்கள் நடித்தாலும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்தார்.
ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் அதிமுகவில் அவர் ஓரங்கட்டப்பட சினிமா வாய்ப்பும் இல்லாமல் தனது சொந்த ஊரான காரைக்குடிக்கே சென்றுவிட்டார். தற்போது அவர் எந்த வேலையில் இல்லாததால் சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவதா பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகையின் பேட்டி
நடிகை வாசுகி கொடுத்த சமீபத்திய பேட்டியில், ஜெயலலிதா புகைப்படம் பதித்த பெரிய டாலர் செயின், வைர மூக்குத்தி, காலில் அரை கிலோவுக்கு கொலுசு இதெல்லாம் போட்டிருந்தேன்.
அவர் இறந்த பிறகு கஷ்டம், அதனால் எல்லாவற்றையும் விற்றுவிட்டேன், எனக்கு கர்ப்ப பையில் 3 கட்டி இருந்தது, அதையும் எடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு நடிகர் சங்கம் உதவவில்லை, எந்த நடிகரும் உதவி செய்யவில்லை.
சண்டையில் பேசாமல் இருந்த பெற்றோர்களுடன் மீண்டும் இணைந்துள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா… அழகிய குடும்ப போட்டோ
ஆனால் தெலுங்கு சினிமாவில் சில நடிகர்கள், அங்குள்ள நடிகர் சங்கம் எனக்கு உதவிகள் செய்கின்றனர்.
ரேஷன் கடையில் தரும் அரிசியை வைத்து சாப்பிட்டு வருகிறேன். எனக்கு தங்குவதற்கு ஒரு இடமும், வேலையும் கொடுத்தால் போதும் நான் பிழைத்துக் கொள்வேன்.
இப்போது நான் ரோடு ரோடாக திரிகிறேன், தயவு செய்து எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள், மடிப்பிச்சை கேக்கிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.