ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஜன்னல் வைக்கத் தலிபான் அரசாங்கம் தடை உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2021ஆம் ஆண்டு தலிபான் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அந்நாட்டு பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், பெண்கள் ஆரம்பக் கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டதுடன், சமீபத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், கவிதைகள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
பெண்கள் வசிக்கும் பகுதிகள்
இதன் தொடர்ச்சியாக தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீடுகளில் ஜன்னல்கள் இருந்தால் அதனை மறைக்கும் விதத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும், புதிய கட்டிடங்களில் ஜன்னல்கள் இருக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.