அகத்தியா
பாடலாசிரியரும், இயக்குநருமான பா. விஜய் இயக்கத்தில் உருவாகி கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளிவந்த திரைப்படம் அகத்தியா. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரித்து இருந்தார்.
மேலும் ஜீவா, ராசி கன்னா, அர்ஜுன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜீவா இப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் அர்ஜுனின் கதாபாத்திரமும் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
முதல் நாள் அகத்தியா திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க
முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அட்வென்ச்சர் கலந்த திகில் திரைப்படமாக உருவாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
படத்தின் வசூல் விவரம்
இந்த நிலையில், அகத்தியா திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.