உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கட்சி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ் மாவட்டத்தின் 17 சபைகளிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
கட்டுப்பணம்
இந்தநிலையில், இதற்கான கட்டுப்பணத்தை கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) யாழ் தேர்தல் திணைக்களத்தில் இன்று (12) காலை செலுத்தியுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) நேற்று (11) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.