ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான எந்தவொரு விமானமும் குறித்த விஜயத்தின் போது பயன்படுத்தப்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
தனது உத்தியோகபூர்வ காரை பயன்படுத்தியே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை மூலம் விளக்கம்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக அறிக்கை ஒன்றை விடுத்து பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு விளக்கமளித்துள்ளது.